திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (17:43 IST)

யு-19 அணியில் இடம் மறுப்பு: தூக்கில் தொங்கிய கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், யு-19 அணி தேர்வில் நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
1990-களில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடியவர் அமீர் ஹனிப். இவரின் மகன் முகம்மது ஜர்யப். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 
 
இவர் பாகிஸ்தான் அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். ஆனால், இவருக்கு வயது அதிகம் என்பதால் அணி தேர்வாளர்கள் இவரை  நிராகரித்து விட்டனர். 
 
இதனால், மனமுடைந்த முகம்மது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் ஊடகங்கள், சமீபத்தில் லாகூரில் நடந்த போட்டியில் ஜர்யப் விளையாடும் போது, காயம் ஏற்பட்டது. 
 
இதனால், அவரை போட்டியில் இருந்து அனுப்பிவிட்டனர், அப்போது, மீண்டும் வாய்ப்பு தருகிறோம் என கூறி அனுப்பிவிட்டனர். ஆனால், வாய்ப்பு வழங்காததால் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கின்றன.