1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:46 IST)

வேலைக்காரனை இன்றே வெளியிடுவோம் ; தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்

வேலைக்காரன் படத்தை இன்றே இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது.

 
நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்த வேலைக்காரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
 
அந்நிலையில், ஒரு விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குனர் ராஜா, இப்படத்தை இணையத்தில் உடனடியாக இல்லாமல் தாமதமாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இப்படத்தை இன்று மாலை 1 மணியளவில் இப்படத்தை வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படத்தை வெளியிட வேண்டாம் என அப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று அப்படம் உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், இயக்குனர் ராஜாவின் கோரிக்கையை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
 
திருட்டுத்தனமாக ஒரு படத்தை இணையத்தில் வெளியிடும் ஒரு இணையதளத்திடம், படத்தை வெளியிட வேண்டாம் என இயக்குனர் கெஞ்சும் சம்பவங்கள் அரங்கேறி வருவது தமிழ் சினிமா உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.