திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (15:41 IST)

மாநில அளவிலான தடகள போட்டி.. ஒரே ஒருவர் ஓடி தங்கம் வென்ற அதிசயம்..!

டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் ஒரே ஒரு வீரர் மட்டும் ஓடி அவர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பிரிவு ஆரம்பிக்க இருந்த நிலையில் அந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் ஏழு பேர் திடீரென வரவில்லை. 
 
எட்டு பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊக்க மருந்து சோதனைக்கு பயந்து ஏழு பேர் போட்டிக்கு வராமல் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து ஊக்க மருந்து சோதனை செய்யப்பட்ட ஒரே ஒரு வீரர் மட்டும் ஓடி அவர் தங்கப்பதக்கம் என்று உள்ளார். இது குறித்து லலித் குமார் என்ற அந்த தங்கம் என்ற வீரர் கூறிய போது ஒவ்வொரு ஆண்டும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றும் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran