புதன், 11 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (10:08 IST)

பாரிஸில் தொடங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்: ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க தடை! ஏன் தெரியுமா?

Olympics 2024
பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க விழாவில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



33வது சர்வதேச ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பாரிஸ் செயின் நதியில் வீரர்கள், வீராங்கனைகள் படகில் அணிவகுப்பாக செல்ல உள்ளனர். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் தொடக்க விழா மைதானத்திற்கு வெளியே நதியில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த தொடக்க விழாவில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உக்ரைன் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இரு நாடுகளையும் கண்டிக்கும் விதமாக சர்வதேச போட்டிகளில் அந்நாட்டு வீரர்கள் ரஷ்யா, பெலாரஸ் கொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு பொதுவான நபர்கள் என்ற அடையாளத்தின்படியே விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் ரஷ்யா, பெலாரஸ் கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு வீரர்கள் தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாது என்றும், ஆனால் பார்வையாளர்களுடன் அமர்ந்து அணிவகுப்பை காண அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K