திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (07:56 IST)

டிராவில் முடிந்தது நியூசிலாந்து-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி!

டிராவில் முடிந்தது நியூசிலாந்து-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது 
 
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 378 ரன்கள் அடித்தது. அறிமுக வீரர் கான்வே இரட்டை சதம் அடித்தார் 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 273 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்தால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டை சதமடித்த டெவோன் கான்வே தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது