1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (08:10 IST)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 2ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 111/2

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 2ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 111/2
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய டெவான் கோன்வே இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்தது. அதன்பின் தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் மற்றும் கேப்டன் ஜோ ரூட் ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் காரணமாக நேற்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 111 ரன்கள் எடுத்துள்ளது 
 
தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதி உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இந்த போட்டியை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்