1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 ஜூன் 2021 (19:04 IST)

274 ரன்கள் இலக்கு: வெற்றி பெறுமா இங்கிலாந்து?

274 ரன்கள் இலக்கு: வெற்றி பெறுமா இங்கிலாந்து?
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 378 ரன்கள் குவித்தது 
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து அந்த அணி டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 274 என்ற இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது இன்னும் 244 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்