புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (07:20 IST)

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது நெல்லை.. குவாலிஃபையர் 2 போட்டியில் த்ரில் வெற்றி..!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. 
 
ஏற்கனவே இந்த தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று குவாலிஃபையர் 2 போட்டி நடந்தது. திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் நெல்லை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 185 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நெல்லை அணி கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் நாளை லைகா மற்றும் நெல்லை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறும் என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணியே இந்த ஆண்டின் டிஎன்பிஎல் சாம்பியன் பட்டம் பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva