செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (10:33 IST)

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

Neeraj Chopra

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் வீரருக்கு அழைப்பு விடுத்திருந்த இந்திய விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவை பலரும் தாக்கி பேசி வருகின்றனர்.

 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானியர்களை வெளியேற சொல்லி இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் நடக்கும் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவை சமூக வலைதளங்களில் பலர் தாக்கி பேசி வருகின்றனர்.

 

இதுகுறித்து வேதனையுடன் விளக்கம் அளித்துள்ள நீரஜ் சோப்ரா “பெங்களூரில் நடக்கும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டு எறிதல்’ போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு தாக்குதல் நடக்கும் முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காஷ்மீர் தாக்குதல் ஒரு எதிர்பாராத சம்பவம். இது ஒரு விளையாட்டு வீரராக சக வீரருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு.

 

இத்தனை ஆண்டுகளாக எனது நாட்டின் கொடியை பெருமையுடன் சுமந்து விளையாடியுள்ளேன். இன்று எனது தேசப்பற்றையே கேள்வி எழுப்புவது மிகவும் வலிக்கிறது. காரணமின்றி என்னை பற்றி விளக்க வேண்டியிருப்பது வேதனை தருகிறது. நாங்கள் சாதாரண மனிதர்கள். எங்களை தயவுசெய்து வேறுமாதிரி சித்தரிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K