1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (09:01 IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட்.. குவாலிஃபையர் 1 போட்டியில் நெல்லை வெற்றி.. ஃபைனலுக்கு தகுதி பெறுமா?

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே லைக்கா கோவை கிங்ஸ் அணி இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று  எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது 
 
இதில் நெல்லை மற்றும் மதுரை அணிகள் மோதிய நிலையில் நெல்லை அணியை வெற்றி பெற்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் நெல்லை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் மதுரை அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்ததால் நெல்லை அணிய 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து நாளை அந்த அணி திண்டுக்கல் அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியை வரும் புதன்கிழமை லைகா கோவை அணியுடன் இறுதி போட்டியில் மோதும் என்பதும் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தான் இந்த ஆண்டின் டிஎன்பிஎல் தொடரின் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva