தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய நடராஜன்!
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சையத் அலி முஷ்டாக் கோப்பையை வென்ற தமிழக அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று இப்போது விறுவிறுப்பானக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த முறையும் தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டார். சிறப்பாக விளையாடிய தமிழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
இறுதி போட்டியில் பரோடா அணியுடன் மோதிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மிகச்சிறப்பாக வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி இந்த கோப்பையை மீண்டும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக வீரரான நடராஜன் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியைப் பாராட்டியுள்ளார். அவரது டிவீட்டில் சபாஷ் தினேஷ் கார்த்திக் அண்ணா. நீங்கள் தான் அசலான மாஸ்டர் த ப்ளாஸ்டர் எனக் கூறியுள்ளார்.