திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (09:09 IST)

டெஸ்ட் அணியில் இல்லாதது வருத்தம்: நடராஜன்!

சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம் தான் என நடராஜன் பேட்டி. 

 
டிஎன்பிஎல் கிரிக்கெட் மூலமாக தனது திறமையை நிரூபித்து ஐபிஎல்லில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம்பெற்று சாதனை படைத்தவர் நடராஜன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது தனது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது நாட்டிற்காக விளையாடுவதை முக்கியமாக கருதி வெற்றியை ஈட்ட உதவிய நடராஜனுக்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இப்போது நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்திய அணியுடன் இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. 
 
கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் 6 மாதங்கள் இல்லாததால், இந்த ஓய்வு எனக்கு அவசியமாகிறது, அதனை நான் புரிந்துக்கொண்டேன். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம் தான் என்றார்.