1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 1 ஜனவரி 2025 (16:18 IST)

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

இந்திய அணியின் சமீபத்தைய தோல்விகளால் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொள்வது புதிய பயிற்சியாளர் கம்பீர்தான். கம்பீர் இந்திய அணிக்கு பொறுப்பேற்றதில் இருந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கிலும், தற்போது நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும் தோற்று சொதப்பியது. அதே போல தற்போது ஆஸி தொடரிலும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது இந்திய அணிக்கு புதிய மீட்பராக இருப்பார் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தோல்விகள் அதை உடைத்துள்ளன. மேலும் இப்போது கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஆஸி தொடருக்காக மூத்த வீரரான புஜாராவைக் கம்பீர் கேட்டதாகவும் ஆனால் தேர்வுக்குழுவினர் அவர் வேண்டாம் என நிராகரித்து விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.