டெஸ்ட் போட்டி தரவரிசை… விராட் கோலி பின்னடைவு; சிராஜ் பாய்ச்சல்!

Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (08:05 IST)

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி நான்காவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நியுசி கேப்டன் கேன் வில்லியம்ஸன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கடுத்த இடத்தில் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் உள்ளனர். நான்காவது இடத்தில் கோலியும், ஜோ ரூட் 5 ஆவது இடத்திலும் உள்ள்னர்.

பவுலிங்கை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 3-வது இடத்திலும், ஹேசில்வுட் அதற்கடுத்த இடத்திலும் உள்ளார். இந்தியாவின் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு இடம் உயர்ந்து முறையே 8, 9-வது இடங்களை வகிக்கிறார்கள்.
சமீபத்திய டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 32 இடங்கள் முன்னேறி 45 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :