திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2023 (17:50 IST)

உலக கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்தார் பிரதமர் மோடி!

PM Modi
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்க்க திரையுலக பிரபலங்கள் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலர் வருகை தந்துள்ளனர் என்பதும் அகமதாபாத் ஸ்டேடியம் முழு கொள்ளளவில்  பார்வையாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் பார்க்க பிரதமர் மோடி மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். பலத்த பாதுகாப்புடன் அவர் மைதானத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் அவரை பிசிசிஐ நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva