திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2023 (17:32 IST)

உலக கோப்பை இறுதி போட்டியில் 50 அடித்த ஒரே இந்திய கேப்டன் இவர்தான்.. நூலிழையில் ரோஹித் மிஸ்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில்  இந்த போட்டியில் 47 ரன்கள் அடித்து இந்திய கேப்டன்  ரோகித் சர்மா நூலிழையில் அரை சதத்தை மிஸ் செய்தார்.

இதனை அடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெறவில்லை. இதுவரை நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்த ஒரே வீரர் தோனி என்ற நிலை தொடர்ந்து வருகிறது.  

தோனிக்கு முன்பும் சரி, தோனிக்கு பின்பும் சரி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் எந்த இந்திய கேப்டனும் அரை சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை இன்று ரோகித் சர்மாவுக்கு முறியடிக்க வாய்ப்பு கிடைத்தும், அவர் தவறி விட்டார், இதனால்  தோனியின் சாதனை தொடர்ந்து வருவதால் அவரது பெயரிலான ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Edited by Siva