வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 நவம்பர் 2023 (16:26 IST)

உலக கோப்பை இறுதி போட்டிக்கு எங்களை அழைக்கவில்லை! – கபில் தேவ் அதிர்ச்சி தகவல்!

Kapil Dev
இன்று நடந்து வரும் உலக கோப்பை இறுதி போட்டிகளை காண தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நரேந்திர மோடி மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறத். இந்த உலக கோப்பை போட்டியை காண இதுவரை உலக கோப்பை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தியாவிற்காக முதல்முறையாக உலக கோப்பையை வென்ற கபில்தேவ் இந்த போட்டிகளை காண செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர் “பிசிசிஐ எனக்கு அழைப்பு விடுக்காததால் உலக கோப்பை இறுதிப்போட்டியை காண நான் செல்லவில்லை. 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். ஆனால் வேலைகளுக்கு மத்தியில் எங்களை மறந்துவிட்டார்கள் போல” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K