சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை… மீண்டும் மிதாலி ராஜ் முதலிடம்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது மிதாலி ராஜ். தற்போது 38 வயதாகும் அவர் 1999 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதையடுத்து நாளை இங்கிலாந்து அணியுடன் நடக்கும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதன் மூலம் 22 ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்து இன்னமும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 8 ஆவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 ரன்) அடித்ததன் மூலம் நம்பர் ஒன் இடத்துக்கு சென்றுள்ளார்.