1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

மீண்டும் உயரும் கொரோனா; 45 ஆயிரம் பாதிப்புகள்; இந்தியாவில் நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 45,892 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,07,09,557 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,05,028 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,98,43,825 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,60,704 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒன்றியம் என சொல்லி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல் முருகன்!