மெஸ்சியை கார் ஏற்றி கொன்று விடுவேன்: மிரட்டல் விடுத்த பிரபலம் யார் தெரியுமா?
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி மீது காரை ஏற்றி கொன்று விடுவேன் என குத்துச்சண்டை வீரர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் தனது எட்டாவது கோலை மெஸ்ஸி பதிவு செய்தார்
இந்த நிலையில் இந்த வெற்றியை மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா அணியின் கொண்டாடி வரும் நிலையில் மெக்சிகோவின் ஜெர்ஸியை மெஸ்ஸி தரையை துடைக்க பயன்படுத்தினார்.
இதனால் மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் கேனலோ என்பவர் ஆத்திரமடைந்து தனது டுவிட்டரில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மெக்சிகோவின் ஜெர்ஸியை அவமனாப்படுத்தியுள்ளார்.
நான் மெஸ்ஸியை நேரில் பார்த்தேன் என்றால் அவரை வாகனத்தை ஏற்றி கொன்று விட கொண்டு விடலாம் என்பது போல் இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். அர்ஜெண்டினாவின் ஜெர்ஸியை நாங்கள் மதிப்பது போல் மெக்சிகோவின் ஜெர்ஸியை மெஸ்ஸி மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran