திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:21 IST)

மெஸ்ஸியின் டாட்டூ போடனும்… பாசமழை பொழியும் அர்ஜெண்டினா ரசிகர்கள்!

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கத்தாரில் கலைகட்டிய கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோத இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் கோல் போட்டிருந்தனர். பெனால்டி ஷுட் மூலமாக அர்ஜெண்டினா 4-2 என்ற கணக்கில் போட்டியை வென்று 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாம்பியன் ஆனது.

இந்நிலையில் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அர்ஜெண்டினா நாட்டில் மெஸ்ஸியின் உருவத்தை தங்கள் உடல்களில் பச்சைக் குத்திக் கொள்ள அந்த நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக டாட்டூ கடைகளில் குவிவதால், அதனால் டாட்டூ கடைகள் நிரம்பி வருகின்றன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.