1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (10:50 IST)

ஓய்வு பெறும் முடிவை திரும்பப்பெற்றார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி

Messi
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றிக்கு மெஸ்ஸி அடித்த இரண்டு கோல்கள் முக்கியம் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டி முடிந்தவுடன் ஓய்வு பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் மெஸ்ஸி அறிவித்தார். இந்த நிலையில் தற்போது தனது முடிவை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
கால்பந்து போட்டிகளில் இருந்து இப்போதைக்கு நான் ஓய்வு பெறப் போவதில்லை என்றும் சாம்பியன் என்ற பெருமையுடன் அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
Edited by Siva