செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (08:06 IST)

6/0…. 10 ஓவரில் 16 ரன்கள்… 0.5 ஓவரில் வெற்றி – சாதனை மேட்ச் !

நேபாளத்தும் மாலத்தீவுகள் அணிகளுக்கும் இடையில் நடந்த டி 20 போட்டி வெறும் 33 ரன்களே சேர்த்த நிலையில் முடிந்துள்ளது.

நேபாளம் மற்றும் மாலத்தீவுகள் பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி 20 கிரிக்கெட் நேற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நேபாளத்தின் வேகப்பந்து வீச்சாளர் அஞ்சலி சந்த் ரன்கள் எதுவும் கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னதாக மலேசிய வீராங்கனை மாஸ் எலிசா ஆறு ரன்களுக்கு மூன்று விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதன் மூலம் அஞ்சலி சந்த் டி 20-யில் குறைந்த ரன்களில் அதிக விக்கெட் பெற்ற வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் .

அஞ்சலி சந்தின் அசுர பந்துவீச்சால் 10.1 ஓவர்களில் 16 ரன்களில் ஆட்டமிழந்தது. மாலத்தீவின் ஒரு வீராங்கனைக் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை. அடுத்து களமிறங்கிய நேபாளம், இலக்கை 0.5 ஒவரில் 17 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி 20 போட்டிகளில் மிகக்குறைந்த ரன்கள் சேர்க்கப்பட்ட போட்டி என்ற சாதனையை இந்த போட்டி நிகழ்த்தியுள்ளது.