லாராவை முறியடிக்க ரோகித் சர்மாவால் மட்டும்தான் முடியும்! – வார்னர் நம்பிக்கை!

Warner
Prasanth Karthick| Last Modified திங்கள், 2 டிசம்பர் 2019 (14:12 IST)
டெஸ்ட் தொடரில் உலக சாதனை படைத்த பிரையன் லாராவின் சாதனையை ரோகித் ஷர்மாவால் மட்டுமே முடியும் என வார்னர் பேசியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மூன்று சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடி 400 ரன்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணியின் கேப்டன் டிக்ளேர் செய்ததால் பாகிஸ்தான் பேட்டிங் செய்ய தொடங்கியது.

2004ம் ஆண்டு மேற்கிந்திய அணி வீரர் ப்ரையன் லாரா டெஸ்ட் தொடரில் 400 ரன்கள் எடுத்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தனது மூன்று சதங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வார்னர் ”என்னால் 400 ரன்கள் அடிக்க இயலாதது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் லாராவின் அந்த சாதனையை முறியடிக்க ஒருவரால் முடியும். இந்திய வீரர் ரோகித் ஷர்மாதான் அவர். அவருக்கு அதற்கான திறன் இருக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும் தான் சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக்கும் காரணம், அவர் அளித்த அறிவுரைகள் எனக்கு இன்றும் என் வாழ்வில் பயன்படுகின்றன என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :