வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:51 IST)

ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த அனுமதி: ஆனால்?

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் மும்பையில் போட்டிகள் நடத்தப் படுமா என்ற கேள்வி எழுந்தது 
 
இந்த நிலையில் தற்போது மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மகாராஷ்டிரா அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் இருந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் கண்டிப்பாக கொரோனா பாதுகாப்பு வளையத்தை பின்பற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அறிவுறுத்தியுள்ளது