முன்னணி நடிகைக்கு கொரோனா பாசிடிவ்....திரையுலகினர் அதிர்ச்சி

Sinoj| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (17:43 IST)

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான கேத்ரினா கைஃப்க்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான கேத்ரினா கைஃப் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
கேத்ரினா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென பிரார்த்திக்கின்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :