பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃபுக்கு கொரோனா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (17:34 IST)
பாலிவுட் நடிகர், நடிகையர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகை கத்ரீனா கைஃபும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை ஆல்யா பட், அமீர் கான், விக்கை கௌசல் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து அக்‌ஷய்குமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைஃபும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பாலிவுட் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :