திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (17:52 IST)

19.2 ஓவரில் மீண்டும் மழை: சிஎஸ்கேவுக்கு இதுதான் இலக்கா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19.2 வது ஓவரில் மீண்டும் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. 
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் லக்னோ பேட்டிங் செய்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.
 
இன்னும் நான்கு பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் மழை நின்றவுடன் மீண்டும் அந்த பந்துகள் போடப்படுமா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
லக்னோ அணியில் ஆயுஷ் பதானி மட்டுமே 59 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு ஓரளவு ஸ்கோரை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran