செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 மே 2023 (13:54 IST)

டிக்கெட் வாங்க வந்த கிரிக்கெட் ரசிகர்கள் திடீர் சாலை மறியல்: சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு..!

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் மே 6ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. 
 
இதற்காக நேற்று இரவு முதலே மழையையும் பொறுப்பெடுத்தாமல் ரசிகர்கள் வரிசையில் இன்று காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரிசையில் இருக்கும் ரசிகர்களுக்கு போதுமான டிக்கெட் தரப்படுவதில்லை என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டிக்கெட் வாங்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாலை மறியல் செய்ததை அடுத்து சேப்பாக்கம் மைதான நிர்வாகிகள் போராட்டம் செய்பவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva