புதன், 8 பிப்ரவரி 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated: புதன், 18 ஜூலை 2018 (16:41 IST)

இன்னும் சரியான அணி உருவாகவில்லை; தோல்விக்கு பின் கோஹ்லி பேட்டி

உலகக் கோப்பை தொடருக்குள் பலம் வாய்ந்த ஆடும் லெவன் அணியை கண்டறிய வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் தோல்வி அடைந்தது. 
 
நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஒருநாள் போட்டி தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. நேற்றைய போட்டியில் ராகுல், உமேஸ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக புவனேஷ்வர்குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது:-
 
இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்திருக்க வேண்டும். ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இங்கு இதுபோன்ற ஆடுகளத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை.
 
அணியில் சில மாற்றங்கள் செய்தோம். ஆனால் அதில் பெரிதாக பயனில்லை. எங்கள் அணிக்கு முன்னேற்றம் தேவையாக உள்ளது. ஒவ்வொரு அணி தேர்வும் பலம் வாய்ந்ததாக தெரிகிறது. 
 
ஆனால் நாங்கள் இன்னும் உழைக்க வேண்டும். எங்களுக்கு 15 ஆட்டங்கள் உள்ளது. அதற்குள் பலம் வாய்ந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.