டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கேப்டன் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக பார்ம் அவுட்டில் இருந்த கேப்டன் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருதினைப் பெற்றார். இந்த போட்டியில் 3 முறை அரைசதம் அடித்தார். இதையடுத்து இப்போது அவர் டி 20 தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 4 ஆம் இடத்துக்கு வந்துள்ளார். இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.