இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி?

Sinoj| Last Updated: புதன், 24 மார்ச் 2021 (23:26 IST)
 

காஷ்மீர் பாலகோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இந்திய – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. அரசியல், வணிகம், போக்குவரத்து, விளையாட்டி உள்ளிட்ட அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டது. இந்த உறவு விரிசலால் இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு பாதிப்புகள் அதிகம்.

இதனால் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடன் சுமூக உறவை பேணுவதாக அறிவித்தார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது இந்திய பிரதமர் மோடி, இம்ரான் கான் விரைவில் நலம்பெறவேண்டுமென டுவீட் பதிவிட்டார்.

இந்நிலையில்,இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் டி-20 போட்டிகள் இந்தாண்டு நடைபெறும் என பாகிஸ்தான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடக்கும் எனக் கூறியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :