திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (16:35 IST)

இந்தியாவில் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ்: மத்திய அரசு தகவல்

புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட நிலையில் அந்த வைரஸ் அனைத்து நாடுகளிலும் பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் இந்தியாவின் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் இந்த 18 மாநிலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை கூடுதல் கவனம் எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தியாவில் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ்