ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (15:35 IST)

வந்துட்டேன்னு சொல்லு.. சென்னை வந்ததை இன்ஸ்டாவில் பதிவு செய்த ஜடேஜா..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் வரும் எட்டாம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இதனை அடுத்து இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் வருகை தந்தனர் என்பதும் அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னை வந்து இறங்கியதை அடுத்து ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சென்னைக்கு வந்ததை தனது வீட்டிற்கு வந்ததை போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.  இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva