திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (13:42 IST)

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

highcourt
தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 
 
பீகார் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் அதே போல் தமிழகத்திலும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு நடக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் அது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாக மனுதாரர் அரசை அணுகும்படி அறிவுறுத்தி உள்ளனர்
 
Edited by Mahendran