புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரரை எச்சரித்த முஸ்லீம் அமைப்புகள்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு முஸ்லீம் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கடந்த ஞாயிற்று கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டார். அதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம் படம் இடம்பெற்றது.
இவரது இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது சமிக்கு அம்மாநில முஸ்லீம் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முகமது சமி தனது இந்து கடவுள் பயன்படுத்தி வாழ்த்து செய்தி தெரிவித்ததை ஏற்க முடியாது. முகமது சமி தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று முன்பு ஒருமுறை முகமது சமி தனது மனைவி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்ட போது முஸ்லீம் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விமர்சனங்கள் குறித்து கவலைப்படாத முகமது சமி நாளை நடைபெற உள்ள தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு கேப் டவுனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.