1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (18:27 IST)

ஜடேஜாவுக்கு வைரஸ் காய்ச்சல்; முதல் டெஸ்ட்டில் தவிக்க போகும் இந்தியா?

தென் ஆப்பரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஜடேஜா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
நாளை மறுநாள் போட்டி துவங்க உள்ள நிலையில் வீரர்களுக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இடது கணுக்காலில் காயம் அடைந்திருந்த தவான் தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேப் டவுனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.