செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (18:33 IST)

இப்படியும் ஒரு ’கிரிக்கெட் வெறியரா’ ? ஐசிசி வெளியிட்ட வைரல் போட்டோ

ICC கிரிக்கெட் அமைப்பு தற்போது ஒரு கிரிக்கெர் பிரியர் ஒருவரின் பிகைப்படத்தை வெளியிட்டுள்ளது.   அதில் மணக்கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளை, தனக்கு  பின்னால் இருந்த டிவியில் கிரிக்கெட்  மேட்ச் பார்ப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளது. 
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஹாசன் தஸ்லீம். இவர் தற்போது அமெரிக்காவில் பணி செய்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டின் மீது விருப்பம் அதனால் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டியை தவறாமல் பார்த்துவிடுவார்.
 
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி,இவருக்கு திருமணம்நடைபெற்றது. அன்று, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2 வ்சது டி- 20 போட்டி நடைபெற்றது. அப்போது அவர் மேட்ஸை தவறாமல் பார்த்துள்ளார். அந்தக் காட்சியை ஒருவர் போட்டோ பிடித்து சமூகலைதளத்தில் பதிவிட்டார். அதை டாக் செய்து குறிப்பிட்டுள்ளது ஐசிசி கிரிக்கெட் அமைப்பு. தற்போது இந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது.
 
இதுகுறித்து ஹசன் தஸ்லீம் கூறுகையில், பாகிஸ்தான் அணி விளையாடும் எந்த போட்டியாக இருந்தாலும் அதைப் பார்த்துவிட்டுத்தான் தூங்கச் செல்லுவேன் எனக்கூறியுள்ளார்.
 
ஆனால் , அவரது திருமணத்தன்று ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.