1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:17 IST)

இலங்கை டி20 லீக் போட்டியில் விளையாடும் ‘கோப்ரா’ நடிகர்!

இலங்கை டி20 லீக் போட்டியில் விளையாடும் ‘கோப்ரா’ நடிகர்!
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவது போன்றே இலங்கையில் லங்கா லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே
 
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த டி20 போட்டிகள் இவ்வாண்டு நவம்பர் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
8 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தம் ஒன்பது போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் 2 செமி பைனல் மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கண்டி டாஸ்கர்ஸ் என்ற அணியில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இர்பான் பதான் விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இவர் விக்ரம் நடித்த கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இர்பான் பதானுக்கு கோப்ரா படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்