1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (07:50 IST)

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல்: டிக்கெட்டுக்காக நள்ளிரவு முதல் வரிசையில் நிற்கும் ரசிகர்கள்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் மூன்றாம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவு முதல் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் காத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஐபிஎல் திருவிழா வரும் 31ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. 
 
இந்த போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதை அடுத்து நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் அதிக அளவில் குவித்துள்ளதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva