சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மார்ச் 2023 (14:09 IST)

சென்னை செங்கல்பட்டு கோவையில் கொரோனா பாதிப்பு அதிகம்: தமிழக அரசு..!

corona
சென்னை செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம் என்றும் மற்ற இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என்றும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் என்பவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் நேற்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி இருந்தது. 
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அவர்கள் கூறிய போது 'தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 17 பேர் மட்டுமே சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார். 
 
சென்னை செங்கல்பட்டு கோவை ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம் என்றும் தினசரி 3000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் 
 
Edited by Siva