1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (07:46 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி உள்பட ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நீலகிரி உள்பட ஆறு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva