ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மார்ச் 2023 (13:26 IST)

தமிழகத்தில் மார்ச் 30ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிய நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட பல இடங்களில் கடந்து செல்ல நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் வர மார்ச் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது ஒன்றுமில்லை
 
Edited by Siva