ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (09:42 IST)

ஐபிஎல் போட்டிக்கு அரசு அனுமதி: இன்று அட்டவணை வெளியாக வாய்ப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் உறுதி செய்தது 
 
இருப்பினும் அரசு ஐபிஎல் போட்டிக்கு அனுமதி கொடுக்காததால் அட்டவணை தயார் செய்யப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அரசு அனுமதி கொடுத்து விட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டில் தொடங்கும் என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் ஐபிஎல் அணி வீரர்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயிற்சிக்காக செல்வார்கள் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் ஒவ்வொரு நாளும் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் போட்டிகள் முழு அட்டவணை இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது