திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜூன் 2018 (18:32 IST)

இரண்டே நாளில் முடிந்த இந்திய-ஆப்கன் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று முடிவுக்கு வந்தது
 
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. தவான் 107 ரன்களும், முரளிவிஜய் 105 ரன்களும் அடித்தனர். 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களும் ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தது
 
இதனையடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்