1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (08:02 IST)

ரிஸ்க் எடுத்து டிக்ளேர் செய்த இந்தியா.. மே.இ.தீவு அணியை வெல்லுமா?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளர் செய்து ரிஸ்க் எடுத்து உள்ளது. 
 
இதனை அடுத்து இந்த போட்டியில் இந்தியா வெல்லுமா என்பதை  இன்றைய ஆட்ட நேரம் முடிவில் தெரியவரும். 
 
இந்தியா தனது முதல் இன்னிசை 438 ரன்கள் எடுத்த நிலையில் மேற்கிந்த தீவுகள் 255 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்தியா 181 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது
 
இதனை அடுத்து மேற்கண்ட தீவுகள் அணி வெற்றி பெற 365 ரன்கள் இலக்க கொடுக்கப்பட்டது, தற்போது அந்த அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 76  ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் வெற்றிக்கு 289 ரன்கள் எடுக்க வேண்டும். 
 
இந்த நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா மீதமுள்ள எட்டு விக்கெட்டுகளை  வீழ்த்துமா அல்லது 289 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva