1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (07:44 IST)

இறுதிபோட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி? இன்று 4வது டி20 போட்டி..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் 
 
அதன்பின் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெறும் ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சூரியகுமார் யாதவ் கடந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்த நிலையில் இன்றும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva