1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (07:39 IST)

மணிப்பூர் விவகாரம்.. நம்பிக்கையில்லா தீர்மானம்.. இன்றுடன் முடிவடையும் நாடாளுமன்ற கூட்டம்..!

New Parliament
மணிப்பூர் விவகாரம் காரணமாக பெரும்பாலான நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானமும் தோல்வியடைந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் பெரும்பாலான நாட்கள் ஒத்திவைப்பதிலேயே முடிந்து விட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் பல பணிகள் பாதிக்கப்பட்டது. 
 
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் எழுப்பிய அமளிம் எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள்ம் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகும். 
 
இந்த நிலையில் இன்றுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva