வெள்ளி, 25 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (15:22 IST)

உலக சாதனை செய்த அஸ்வின்.. 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனே நகரில் இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, சற்று முன் வரை 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 76 ரன்கள் எடுத்தார் என்பதும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், இன்றைய டெஸ்டில் இரண்டாவது விக்கெட்டை அஸ்வின் எடுத்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பட்டியலில், முதல் இடத்தில் அஸ்வின் உள்ளார்.

அஸ்வின் மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 530 விக்கெட்டுகள் எடுத்து உள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran