1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (12:01 IST)

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வங்கதேசம் பேட்டிங்kஇல் திணறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், கான்பூரில் இன்று இரு அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று, வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
 
அதனைத் தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரரான ஜாகிர் உசேன் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஆகாஷ் தீப் சிறப்பான பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதனை அடுத்து, இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான  ஷத்மின் இஸ்லாம் 24 ரன்களில் அவுட் ஆனார்.
 
சற்று முன் கிடைத்த தகவலின்படி, வங்கதேச அணி 18 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய பந்துவீச்சில் இரு விக்கெட்டுகளை கைப்பற்றியவர் ஆகாஷ் தீப் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran